பொழுதுபோக்கு சாதனம் என்கிற திரை படத்தை மக்கள் சிந்தனையை மேம்படுத்தும் கலையாக மாற்ற என்ன செய்யலாம்?
ஒரு வருடத்தில் 100 முதல் 120 வரை வெளிவரும் நம் தமிழ் சினிமாவில் ஒரு சதவீதம் கூட உலக தரமில்லை என்றால், அது யார் குற்றம்?
இதில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. ஒரு திரைப்படம் மிக மோசமாக இருக்க முதல் காரணம் அதன் " திரைக்கதைதான்".
ஒரு திரைப்படத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு அந்த படத்தின் உயிர் நாடியான " திரைக்கதை" என்கிற ஒன்றை சார்ந்ததுதான்.ஆனால் நம்மவர்கள் அதை பற்றி துளி கூட கவலை படாமல் படம் எடுப்பவர்கள்.முதலில் தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு "திரைக்கதை"பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
அடுத்த அம்சம் அதன் "திரை மொழி".அப்படி என்றால் என்னவென்று கேட்கும் நம்மவர்கள் "உலக சினிமா" படங்களை தேடி பிடித்து பார்க்க வேண்டும்.காப்பி அடிக்க கூடாது.
நான் மேலே குறிப்பிட்டபடி குறைந்த வருடத்திற்கு 10 தரமான படங்களை தருவதற்கு என்னவெல்லாம் செய்யலாம்.?
ஒரு பட்டியலிடலாம்.
1.தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்கள் மற்றும் சிறந்த தயாரிப்பாளர்கள் சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கலாம்.அதில் "மாற்று சினிமா"குறித்த ஆலோசகர்களும் பங்கு பெற வேண்டும்.
2.நிறைய புதிய இயக்குனர்களிடம் இருந்து திரைக்கதைகளை வாங்கி அதன் மீதான விவாதம் நடத்த வேண்டும்.அதில் தேர்வாகும் பத்து கதைகளை தயாரிப்பளர்களிடம் கொடுக்கவேண்டும்.
3.இந்த அமைப்பை NFDC ஏற்று நடத்தலாம்.இதற்கு மாநில அரசு உதவ முன்வரலாம்.
4.அல்லது கார்பரேட் அமைப்புகள் இந்த அமைப்பை வழி நடத்தலாம்.
5.ஆனால் இதில் எந்த சாதி,மத,வர்க்க மற்றும் கட்சி அரசியல் இருக்க கூடாது.
6.இந்த படங்களுக்கு அரசு வரிவிலக்கு அளிக்கவேண்டும்.தணிக்கை துறையில் இருந்து எந்த குறுக்கீடும் இருக்க கூடாது. ஏனெனில் நம் தணிக்கை துறை அத்தனை மோசம்.
7.முக்கியமான விஷயம் இந்த திரை படங்கள் வெளி வரும் நாளில் எந்த "பெரிய படங்களும்"வெளி வராமல் இருப்பது சேமம்.
8.இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்றாலும், அரசாங்கம் மற்றும் நல்ல சினிமாவை விரும்புபவர்கள் நினைத்தால் நடத்தி காட்டலாம்.
பூனை கழுத்தில் யார் மணியை கட்டுவது.
No comments:
Post a Comment