தலைமுறைகள்…..
“ I don’t know
Tamil “
“My second
language is Hindi “
இப்படி எல்லாம்
சொல்லிக்கொண்டு அலையும் நம்மைப் போன்ற கனவான்களும் நம் குழந்தைகளும் கண்டிப்பாக பார்க்க
வேண்டிய படம் இது.
கடவுள்,சாதி,மதம்,மொழி
எல்லாம் கற்பிதம் என்றாலும் தாய் மொழிதான் ஒருவனை அடையாளப்படுத்துகிறது.அந்த தாய் மொழி
தெரியாத ஒரு பேரனுக்கும், தாய் மொழியைத் தவிர வேற எந்த மொழியையும் தெரியாத ஒரு தாத்தாவுக்கும்
இடையேயான வாழ்வியலை பற்றி பேசுகிறது தலைமுறைகள்.
கொஞ்சம் அசந்தாலும்
ஒரு பிரச்சாரப் படமாகவோ,ஒரு “கதை நேரமாகவோ” மாறிவிடக் கூடிய படத்தை மிக கவனமாக ஒரு
திரைப் படமாக பதிவு செய்து இருக்கிறார் பாலு.
கூட்டுக் குடும்பங்கள்
வழக்கொழிந்து கொண்டு இருக்கும் இக்காலத்தில் வீட்டில் முதியவர்கள் இல்லாமல் வாழ்ந்து
கொண்டிருக்கும் நம் சமுதாயம் எத்தனை போலியானது என்று நமக்கு மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார்
பாலு.
திரைக் கதை அத்தனை
அழுத்தமில்லை,எடிட்டிங் சற்று உறுத்தலாகப் படுகிறது. பிண்ணணி இசை அவ்வளவு மோசமில்லை,ராஜாவால்
“வீடு” படம் போன்ற ஒரு பிண்ணணி இசை வார்ப்பை கொடுக்க முடியாது என்று புரியவைத்து இருக்கிறார்.
பாலு நேரில் பேசுவது
போலவே நடித்து இருக்கிறார்.மற்றவர்கள் இயல்பாக இருக்கிறார்கள்.ஒரு சிலர் நடிப்பில்
அமெச்சூர்தனம் தெரிகிறது.
இந்த வருடத்தில்
இரண்டு அல்லது மூன்று படங்கள் தான் தேறியிருக்கின்றன அதில் தலைமுறைகளை தைரியமாக சேர்க்கலாம்.
No comments:
Post a Comment