பல பிரச்சனைகளும்,அரசியல்
குறுக்கீடுகளும் இடையே நடைபெற்ற இந்த விழாவில் பல அபத்தங்களையும் சில ஆறுதல்களையும்
காண முடிந்தது.
சுஹாசினி பேசுகையில்
யாரும் பொருளுதவி செய்யவில்லை என்று புலம்பி தள்ளினார்,மற்ற மாநிலங்களில் எல்லாம் அரசின்
உதவியில் நடந்த விழா நம்மூரில் அனாதையாக நடந்தேறியது.
ஹிந்து நாளிதழ்
20 லட்சம்,சரத் குமார் 8 லட்சம்,மணிரத்னம் 7 லட்சம் என பலரும் உதவியுள்ளனர்.ஆனால் நடிகர்
சங்கம்,திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்,இயக்குனர் சங்கம் இன்னும் பிற சங்கத்தினர் எந்த
உதவியும் செய்யாதது ஏனோ தெரியவில்லை?
இன்னும் நம்மூரில்
ஒரு திரைப்படத்தை எப்படி பார்ப்பது என்றே தெரியவில்லை.படம்
பார்க்கும் போது அலைபேசியை உபயோகிப்பது,குறட்டை விட்டு தூங்குவது,படம் ஆரம்பித்து பாதி
காட்சியில் வருவது,இடையில் விசில் அடிப்பது என எல்லா வகை தொந்தரவுகளையும் தருவது மிகுந்த
சலிப்பை தந்தது.
அப்புறம் நகரின்
மையத்தில் மட்டும் நடந்த இந்த விழா சென்னையின் புற நகரையொட்டியும் நடக்க வேண்டும்.உதாரணத்திற்கு
தாம்பரம்,ஆவடி,வட சென்னை,பூந்தமல்லி,திருவான்மியூர் போன்ற இடங்களிலும் நடந்திருந்தால்
பலரும் பயனடைந்திருப்பார்கள்.
பலருக்கு இப்படியொரு
நிகழ்வு நடப்பது தெரியெவேயில்லை.இன்னும் விளம்பரப்படுத்தியிருக்கலாம்.
தமிழ் படங்களின்
தரத்தை பற்றிய சர்ச்சையும் ஒய்ந்தபாடில்லை.”ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படம் திரையிடப்படாதது
குறித்த கேள்விக்கு மிஷ்கின் படத்தை தர முன்வரவில்லை என்றனர்.ஆனால் ”மூன்று பேர் மூன்று
காதல்”, “மூடர் கூடம்”, ”ஆறு மெழுகுவர்த்திகள்”,”கும்கி” எல்லாம் எந்த தைரியத்தில்
திரையிடுகிறார்கள்?பாதி படங்கள் காப்பி,மீதிய படங்கள் அரசியல் குறுக்கீடுகள்.
நான் பார்த்த
16 திரைப்படங்களில் 6 திரைப்படங்கள் அப்படியொரு அற்புதம்.அவைகள் The Circle
within,Roa,Harmony Lessons,Parviz,Tangerines, இவை அனைத்தையும் தயவு செய்து காண தவறாதீர்கள்.Ship
of Theseus ஏற்கனவே திரையரங்கில் பார்த்து விட்டதால் அதையும் சேர்த்து கொள்ளலாம் நல்ல
படம்.
நான் தவற விட்ட
படங்கள் Tha Omar,Hush Girls Don’t scream,Blue is the warmest colour,The
past,Like father Like son,Mother I love you முதலியவைகளாகும்.இவை அனைத்தையும் இணையத்தில்
பார்த்து விட வேண்டும்
சில இயக்குனர்களையும்,
உதவி இயக்குனர்களையும் சந்தித்து பேசினேன்.அவர்களின் பேச்சின் மூலம் தெரிந்து கொண்டவைகளைப்
பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
சில புதிய நண்பர்களையும்,நல்ல
அனுபவங்களையும் பெற்ற மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறேன்.
நன்றி.மீண்டும்
சந்திப்போம்.
No comments:
Post a Comment